விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: துணை ஜனாதிபதி சிபிஆர்
சென்னை: '' விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்,'' என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
@1brசென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் முக்கிய பங்கி வகிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பட்டம் வாங்கியவர்கள் நேர்மையுடன் தேசத்திற்காக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சிறந்து விளங்க வேண்டும். பல்கலைக்கழகக் கல்விக்குப் பிறகும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2047ம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (7)
அப்பாவி - ,
02 ஜன,2026 - 21:35 Report Abuse
இவர் ஒருத்தர்தான் சொல்லலை. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
02 ஜன,2026 - 20:18 Report Abuse
ஏழை மேலும் ஏழையாகிறான் ...... கவுன்சிலர் கூட ஐந்தாண்டு பதவி முடிந்ததும் பங்களா கட்டுகிறார் ..... பிசினஸ் நடத்துகிறார் .... இந்த லட்சணத்தில் விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ???? 0
0
Reply
நாகராஜ் - ,
02 ஜன,2026 - 19:42 Report Abuse
பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் நல்லது தான் 0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
02 ஜன,2026 - 19:07 Report Abuse
வரும் வரும்னா எப்ப வரும் 2047 ஆ இல்ல 2057 ஆ 0
0
vivek - ,
02 ஜன,2026 - 20:26Report Abuse
.எதுக்கு இப்படி கதறுகிறாய் 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
02 ஜன,2026 - 20:40Report Abuse
எரியுது? 0
0
Reply
மேலும்
-
பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,
-
டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
-
வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்: கியூபாவை சேர்ந்த 32 பேர் பலி
-
துபாயில் கார் விபத்து; கேரளாவைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
Advertisement
Advertisement