பாதாள சாக்கடை குழியில் விழுந்து குழந்தை பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு
நாமக்கல்: பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் விழுந்து, 4 வயது குழந்தை உயிரிழந்த நிலையில், மாநகராட்சி சார்பில், அவரது பெற்றோரிடம், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்-பட்டது.
நாமக்கல் மாநகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதி-களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்-டுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட, 4-வது வார்டு சின்-னமுதலைப்பட்டி கடக்கால் வீதியில், பாதாள சாக்கடை பணிக்-காக, கடந்த, 31ல், 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
இதில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. நேற்று முன்-தினம் புத்தாண்டு என்பதால், தொழிலாளர்கள் பணிக்கு வர-வில்லை.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணி-கண்டன்-ரதிபிரியா தம்பதியரின் மகன் ரோகித், 4, நேற்று முன்-தினம் மாலை விளையாடி கொண்டிருந்தபோது, பாதாள சாக்-கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாநகராட்சி சார்பில், துணை மேயர் பூபதி, 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிவாரண தொகையை, குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உடனிருந்தார்.
மேலும்
-
பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,
-
டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
-
வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்: கியூபாவை சேர்ந்த 32 பேர் பலி
-
துபாயில் கார் விபத்து; கேரளாவைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி