வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் அழைப்பு

6

வாடிகன்: வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போப் 14வது லியோ அழைப்பு விடுத்துள்ளார்.



வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருக்கிறது. வெனிசுலாவில் தற்போது இடைக்கால அதிபர் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்று வருகிறது.


வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்க படைகள் கையாண்டுள்ள நடவடிக்கை சர்வதேச நாடுகள் தரப்பில் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளன. இந் நிலையில், வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போப் 14வது லியோ அழைப்பு விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் பேசியதாவது;


அனைத்து தரப்பினர் இடையே உரையாடல்களை ஊக்குவித்து ஒருமித்த கருத்தை தேடும் ஒரு ராஜதந்திரம், பலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு ராஜதந்திரத்தால் மாற்றப்படுகிறது.


போர் நாகரீகம் ஆகிவிட்டது. இங்கே போருக்கான ஆர்வம் பரவி வருகிறது. உலக நாடுகள் எதிர்காலத்தில் வெனிசுலா மக்களின் விருப்பங்களை மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.


இவ்வாறு போப் 14வது லியோ கூறினார்.

Advertisement