இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை: வேலுநாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

16

புதுடில்லி: இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர் வேலுநாச்சியார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.



இது குறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.

@twitter@https://x.com/narendramodi/status/2007279758162395559?s=20twitter
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement