மதுரையின் கதைசொல்லி சரவணன்
''வி ண்வெளி வீரர்களாக மாற்றுத்திறனாளி பெண்ணும், ஒரு ஆணும் பயணித்தனர். செல்லும் வழியில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட, அங்கிருந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் அவர்களை தடுக்கிறார். அப்போது அப்பெண்ணின் செயற்கை கால் கழன்றது. அருகில் உள்ள பேனலில் பட்டு ராக்கெட் நடுவழியில் செயலிழக்கிறது.
இச்சூழலில் விண்வெளியில் செயற்கை கால் இல்லாத நிலையிலும் முதல் ஆளாக ராக்கெட்டில் இருந்து வெளியே வந்து அப்பெண் கோளாறை சரிசெய்கிறார். இங்கே தன்னை மாற்றுத்திறனாளி என்று அப்பெண் பார்க்கவில்லை. தன்னை தகுதியான விண்வெளி வீரராகவே கருதியிருக்கிறார்''என மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு ஒரு கற்பனையாய் குட்டிக்கதையை சுவராஸ்யமாக சொல்லி முடிக்க, மாணவர்கள் கைத்தட்டல் விண்ணை பிளந்தது.
அந்த கைதட்டலுக்கு சொந்தக்காரர் சரவணன்.
மதுரையில் பள்ளி தலைமை ஆசிரியாக இருந்து பாடம் நடத்துவதோடு, கதை சொல்லியாகவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். எழுத்தாளரும்கூட. பல நுால்களை எழுதியுள்ள சரவணன், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
நாடகப் பாணியில் உருவாக்கப்படும் எனது கதைசொல் முறை மூலமும், குழந்தைகளை பங்கேற்பாளர்களாக மாற்றுவதன் வழியாகவும் தமிழகம் முழுவதும் இளம் உள்ளங்களை கவர்ந்து வருகிறேன். இதற்காக குழந்தைகளுடன் நேரடி கலந்துரையாடல் செய்துவருகிறேன். 26க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளேன்.
அவற்றில் குழந்தை நாவல்கள், சிறுகதைகள், குழந்தை வளர்ப்பு, கல்வி சார்ந்த நுால்கள், மொழிபெயர்ப்பு நுால்கள் எனப் பல வகைகள் அடங்கும். தமிழ்நாட்டின் இளந்தளிர் திட்டத்திற்கும், மகாராஷ்டிர மாநிலப் பாடத்திட்டத்திற்கும் பாடப்பொருட்களை வடிவமைத்துள்ளேன். எனது புத்தகங்கள், பெரியவர்களுக்கும் சிறுவயது நினைவுகளை அசைப்போட வாய்ப்பு வழங்குகிறது.
'தினமலர் லட்சிய ஆசிரியர் விருது' போன்ற மதிப்புமிகு விருதுகளைப் பெற்றுள்ளேன்.
தற்போதுள்ள கதைகள் பல நீதிக் கதைகளாக உள்ளன. இவை குழந்தைகளுக்கு தேவையானது அல்ல. 18ஆம் நுாற்றாண்டில் தான் குழந்தைகளுக்கான கதைகள் உருவாகின. ரஷ்யா போன்ற வெளிநாட்டு பேண்டசி கதைகள் தான் தமிழில் கிடைக்கின்றன.
இதை மாற்ற தான், நம் குழந்தைகளுக்கு தமிழில் கதைகளை எழுதி வருகிறேன். எனக்கு வரலாறு மீது அதிக ஆர்வம். அதனால் தான் முள்வேலி என்ற புத்தகத்தை எழுதினேன். அதில், இந்தியா முழுவதும் எல்லைகளில் முள்வேலி (மரவேலி) அமைக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் மற்றவர்கள் உப்பு எடுக்காமல் இருக்க அமைக்கப்பட்ட வேலியாக இது பார்க்கப்பட்டது. அதை தேடி ஒருவர் கண்டுபிடிப்பார். உப்பு சத்தியாகிரகத்தை மையமாக கொண்டது இந்த கதை. காந்தி பிரபலமாக முக்கிய காரணம் சத்தியாகிரகம் தான் என்று குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு கூறினார்.
இவரை வாழ்த்த 99441 44263
மேலும்
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு