தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 03) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின. தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி ஆபரண தங்கம், கிராம் 12,480 ரூபாய்க்கும், சவரன், 99,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 257 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் (ஜனவரி 01), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் குறைந்து, 256 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 03) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 256 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதை தினமும் வெளியிடுவதால் என்ன பயன்.. எப்படியிருந்தாலும் மத்திய வர்க்கத்தினர் வாங்கத்தான் பாடுபடுவார்கள். எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.
அப்பாடா..தங்கத்தை இனி
ஏழை மக்களும் வாங்கலாம்..
சந்தோஷம்.. வயிற்றெரிச்சலை கிளம்பாதீங்க..மேலும்
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்
-
வில்லிசைக்கு ஒரு மாதவி
-
மதுரையின் கதைசொல்லி சரவணன்
-
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு