திமுக அரசு எப்போதும் உண்மையாக இருக்கும்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

39


சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை திமுக நிறைவேற்றியுள்ளது. அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் (டி.ஏ.பி.எஸ்.,) திட்டம் அறிவித்து 20 ஆண்டுகாலக் கோரிக்கையை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.


நம்பி ஓட்டளித்த மக்களுக்கு, திமுக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம். அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக டி.ஏ.பி.எஸ்., அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.


திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும். தலைநிமிர்ந்து வரும் தமிழகத்தின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement