தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி; அண்ணாமலை காட்டம்
சென்னை: ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
@1brஅவரது அறிக்கை: தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ரூ.12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 14 நாட்களாக, சம வேலைக்கு, சம ஊதியம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், முதல்வர் ஸ்டாலின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் உழைப்பிலும், ஆசிரியப் பெருமக்கள் அக்கறையிலும் சாதனை செய்யும்போது, வெட்கமே இல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டிப் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை, பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாய் இருப்பதை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஊதியம் வழங்க மாட்டோம் என்று அச்சுறுத்துவது, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே. திமுக அரசு, கல்வியை மதிப்பதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. சமத்துவம், சமூகநீதி என்றெல்லாம் வெறும் வாய்வார்த்தையில் நாடகமாடும் முதல்வர், உண்மையில் ஆசிரியப் பெருமக்களுக்குக் கொடுப்பது அநீதியும் அச்சுறுத்தலும் தான்.
பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகால வலி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஆகியவை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்குச் செய்துள்ள துரோகத்தையே காட்டுகிறது. ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி. ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம்.
ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கும்போது மட்டுமே, சமூகம் முன்னேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், அத்துமீறலையும், தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கான பதிலும் திமுகவுக்குக் கிடைக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (19)
Gurumoorthy - ,இந்தியா
10 ஜன,2026 - 15:15 Report Abuse
அண்ணாமலை நீங்கள் மூளை அறிவை பயன்படுத்தவில்லை.உங்கள் பா.ஜ.ஆட்சி கல்வி அறிவும் குறைவு.வடமாநிலங்களில்.குடும்பக்கட்டும் இல்லை கொலை,கொள்ளையும்அதிகம் என்பதை மறக்க கூடாது.நீங்கள் பொய்யான, புரட்டான, செய்திகளை வெளியிடக்கூடாது. 0
0
Reply
SureshKumar Rajendran - ,இந்தியா
09 ஜன,2026 - 11:47 Report Abuse
அண்ணாமலை அவர்கள் 20000 புத்தகம் படித்த ரகசியம்? 0
0
Reply
Ravichandran Thiagarajan - ,
09 ஜன,2026 - 08:44 Report Abuse
BJP மோடி, அமித்ஷா அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதியை கொடுத்திருந்தால் இப்பிரச்சனையே வந்திருக்காது. 0
0
Gurumoorthy - ,இந்தியா
10 ஜன,2026 - 15:26Report Abuse
நரேந்திர மோடி,நிர்மலா சிதாராமன்,தர்மேந்திரா பிரதான், ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டுக்கான நிதியை முதலில் விடிவியுங்கள்.ஏமாற்றாதீர்கள்,மோசடி செய்யாதீர்கள்.நீங்கள் மனிதர்கள் என்றார்கள்,நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால்.
. 0
0
Reply
Matt P - nashville,tn,இந்தியா
09 ஜன,2026 - 01:09 Report Abuse
தப்பு செஞ்சவங்களை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி வூரில் வலம் வரும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. கருப்பு புள்ளி என்றவுடன் அந்த நினைவு தான் வருகிறது. தமிழ்நாட்டு அரசியலில் நிறைய பேருக்கு அந்த சம்பவம் தேவைப்படுகிறது. 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
08 ஜன,2026 - 21:21 Report Abuse
இந்த அவலங்கள் தவிர பல பள்ளிகள் நடக்காமலேயே ஆசிரிகார்களுக்கு இலவச சம்பளமாக மக்கள் வரிப்பணம் வீணாகிக்கொண்டிருக்கிறது. புதிய பள்ளிக் கட்டங்களோ உடனே இடிந்துவிடுகின்றன. 0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
08 ஜன,2026 - 17:40 Report Abuse
அண்ணாமலை இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியும் எட்டி கூட பார்க்காத பிரதமர், பல உயிர்களை பறி கொடுத்தபோதும் மனம் இறங்காத பிரதமர், இன்றைக்கு விவசாயிகளின் நண்பனாக நடிப்பது அதற்க்கு நீங்கள் வெண்சாமரம் வீசுவதும் கூஜா தூகேகுவதும் எவ்வளவு பெரிய கருப்பு புள்ளி நீங்களே சொல்லுங்கள் 0
0
vivek - ,
08 ஜன,2026 - 17:54Report Abuse
தசரத மாமன்னா...எவளோ கூஜா தூக்கினாலும் நீர் அறிவாலய வாசலில் காவலாளி தான்...சிரிப்பா வருது 0
0
Murugesan - Abu Dhabi,இந்தியா
08 ஜன,2026 - 17:55Report Abuse
தமிழக்கத்தில் நடக்கிறதை பேசு ஊபி, உன்னுடைய முதுகில இருக்கிற அழுக்கை எடு, 0
0
rajasekaran - neyveli,இந்தியா
08 ஜன,2026 - 17:59Report Abuse
நண்பரே டெல்லி விவசாயிகள் போராட்டம் என்பது உங்களுக்கு ஒன்றும் தெரியாத. அதில் யார் யார் ஈடுபட்டு இருந்தார்கள் என்று. வெளி நாடு சக்திகள் எல்லாம் இதில் இருந்தன என்று proof ஆகி உள்ளது. மேலும் தற்போது விவசாயிகள் உணர்கின்றனர். இடை தரகர்கள் தான் எந்த போராட்டத்துக்கு காரனம் என்று. 0
0
raja - MUMBAI,இந்தியா
08 ஜன,2026 - 18:02Report Abuse
கேள்விக்காண பதில் இது அல்ல திரு தசரதன் அவர்களே. தமிழ் நாடு ஆசிரியர்களை பற்றி கேட்டால் . பஞ்சாப் விவசாயிகளை பற்றி கூறுகிறீர்கள். தமிழ் நாடு ஆசிரியர்களை பற்றிய பதில் இல்லையோ தங்களிடம் ? 0
0
Kogulan - ,
08 ஜன,2026 - 18:23Report Abuse
சரியாகச்சொன்னீர்கள், இத்தகையோருக்கு பதில் என்ற தொணியில் நேரத்தை வீணாக்கவீரும்பவீல்லை 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
08 ஜன,2026 - 18:27Report Abuse
மாநில அரசு செய்ய வேண்டியதை மத்திய அரசிடம் கேட்டால் எப்படி. இதில் மட்டும் மாநில சுயாட்சி கிடையாதா.
20 பேர் தமிழ் நாட்டில் மட்டுமே வந்து நடத்தினார்கள். தேர்தலை முன்னிட்டு. இப்போது மீண்டும் தேர்தல் வருகிறது. குளிருக்கு பிறகு ஏப்ரல் மீண்டும் போராட்டம் நடத்த வருவார்கள். 0
0
Tamilselvan, kangeyam - ,
08 ஜன,2026 - 20:20Report Abuse
ஏலே பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு
வழி சொல்ற? 0
0
Reply
Kannam - ,
08 ஜன,2026 - 17:34 Report Abuse
தமிழக மக்களே, கடந்த 5 வருடத்தில் மக்களுக்கு எதிரான திமுக ஆட்சியின் அவலங்களை அனுபவித்துவிட்டீர்கள். 2026ல் மீண்டும் திமுகவை தேர்ந்தெடுக்க வேண்டுமா என பலமுறை யோசித்து, நடுநிலை கட்சியை தேர்ந்தெடுங்கள். 0
0
Narayanan Muthu - chennai,இந்தியா
08 ஜன,2026 - 18:24Report Abuse
இன்னும் கொஞ்சம் சத்தமா . 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
08 ஜன,2026 - 17:23 Report Abuse
திமுக தொடங்கியதே தனி நாடு கேட்டகதான். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்று வசனம் பேசியவர்கள். பிறகு கைது நடவடிக்கைக்கு பயந்து மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று சொல்லி கொண்டு வருகிறார்கள். இப்போது மாநிலத்தில் கூட்டாட்சி மத்திய ஒரே கட்சி என்று அடுத்த 50 ஆண்டுகளுக்கு வர போகிறது. குடும்ப கட்சிகள் அனைவரும் குடும்பத்தைதான் வள படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
08 ஜன,2026 - 17:23 Report Abuse
கல்வி செல்வமே தலைசிறந்தது. ஈடு எதுவும் இல்லை என்று கூறும் கழகம் அந்த அறிவை கொடுப்பவர் களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. 0
0
Reply
Vijay - Chennai,இந்தியா
08 ஜன,2026 - 16:39 Report Abuse
தேசப்பற்று, தெய்வபக்தி, தமிழ் உணர்வு, தனி மனித ஒழுக்கம் என்று எதுவுமே இல்லாத ஸ்டாலினுக்கு ஓட்டு போட்ட அனைவரும் குற்றவாளிகளே. 0
0
Reply
மேலும்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தில் கோளாறு; பயணிகள் கடும் அவதி
-
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது; கவுன்டவுன் தொடக்கம்
Advertisement
Advertisement