விசாரணை இடத்தில் மம்தா ஆஜர்: ஆதாரங்களை பறித்து இடையூறு செய்வதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

10

கோல்கட்டா: '' முதல்வராக இருந்து கொண்டு மம்தா, விசாரணைக்கு இடையூறு செய்வதாகவும் பணமோசடி மற்றும் நிலக்கரி கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறார்,'' என அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. அவருக்கு எதிராக கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

விமர்சனம்



மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தல் கமிஷன் நடத்திய எஸ்ஐஆர் பணிகள் முதல் பல்வேறு விஷயங்களில் பாஜவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஐபேக் நிறுவனம்



மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தோற்றுவித்த ஐபேக் என்ற நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் வியூக பணியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகிவிட்டதால், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக தற்போது ரிஷி ராஜ் சிங், பிரதிக் ஜெயின், வினேஷ் சந்தேல் ஆகியோர் உள்ளனர்.

சோதனை



இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ( ஜன.,08) சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மம்தா பானர்ஜி சோதனை நடக்கும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

இதுவா வேலை



அப்போது அவர் கூறியதாவது: எங்களின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் தொடர்புடைய ஹார்டு டிஸ்க்களை சேகரிப்பதா அமலாக்கத்துறை மற்றும் அமித்ஷாவின் வேலை. நாட்டை பாதுகாக்க முடியாத உள்துறை அமைச்சரால், எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துச் செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சாட்டு



@block_Y@இதனைத் தொடர்ந்து ஐபேக் நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின் வீட்டிற்கும் மம்தா சென்றார். அங்கும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இவர் திரிணாமுல் காங்கிரசின் ஐடி விங் தலைவராகவும் உள்ளார். இங்கிருந்து மம்தா, மொபைல்போன், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. block_Y

அரசியலமைப்புக்கு எதிரானது



இங்கு நடக்கும் சோதனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: பிரதிக் ஜெயின் வீட்டில் நடக்கும் சோதனை அரசியல்சாசனத்துக்கு எதிரானது. அரசியல் ரீதியாக சோதனை நடக்கிறது. கட்சி தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்துச் செல்ல முயற்சி நடக்கிறது. அதில் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இருக்கிறது. அவற்றை எடுத்து வந்துவிட்டேன்.பாஜ அலுவலகத்தில் நான் ரெய்டு நடத்தினால் என்னவாகும். ஒரு புறம், எஸ்ஐஆர் பணி என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் காரணமாக, எனது கட்சி குறித்த தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் தொடர்புடையதல்ல



இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நிலக்கரியை சட்டவிரோதமாக திருடி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை, மேற்கு வங்கத்தில் 6 மற்றும் டில்லியில் 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்பு உடைய ஒருவர் ஐபேக் நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


@quote@மேற்கு வங்க முதல்வர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் வரும் வரை, சோதனை அமைதியாக நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள், சோதனை நடந்த பிரதீக் ஜெயின் என்பவர் வீட்டுக்கு வந்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை எடுத்துச் சென்றனர். quote

Tamil News
இதன் பிறகு, முதல்வர் கான்வாய், ஐபேக் அலுவலக பகுதிக்கு சென்றது. போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக பறித்தனர். இதனால், நடந்து வரும் விசாரணைக்கு தடையை ஏற்படுத்தியுள்ளது.

@block_G@இந்த சோதனை எந்த அரசியல் கட்சியையும் இலக்காக கொண்டு நடக்கவில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளோம். எந்த கட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படவில்லை. தேர்தல் தொடர்பாக சோதனை நடக்கவில்லை. block_G

பணமோசடிக்கு எதிரான வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். சட்டப்பாதுகாப்புகளின்படி இந்த சோதனை நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், '' முதல்வராக இருந்து கொண்டு விசாரணைக்கு மம்தா இடையூறு செய்கிறார். நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறார். அவரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்,'' எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement