காலையில் சர்ர்... மாலையில் விர்ர்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

1

@twitter@twitter சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் ரூ.480 குறைந்து காணப்பட்ட நிலையில், மாலையில் ரூ.640 அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின.

2026ம் ஆண்டு தொடங்கிய பிறகும், தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாகவே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜனவரி 01), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் குறைந்து, 256 ரூபாய்க்கு விற்பனையானது

நேற்றைய நிலவரம்


நேற்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, மீண்டும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்


இந்நிலையில் இன்று (ஜனவரி 03) காலையில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து காணப்பட்ட நிலையில், மாலையில், ரூ.640 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 257 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோ 2 லட்சத்து 57 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

https://www.dinamalar.com/news/business-commodity

Advertisement