சிறப்பு முகாமில் பெறப்படும் படிவங்களுக்கு விரைவில் முடிவு காண வேண்டும்: பார்வை-யாளர்


நாமக்கல்: ''சிறப்பு முகாமில் பெறப்படும் படிவம் -6, 7, 8 ஆகி-யவற்றிற்கு, விரைவில் முடிவு காண வேண்டும்,'' என, வாக்காளர் பட்டியல் பார்வை-யாளர் ராகுல்நாத் கூறினார்.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்---2026' தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்-றத்துறை இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ராகுல்நாத் தலைமை வகித்து பேசியதாவது:


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, 2002 வாக்காளர் பட்டியலுடன் தொடர்புபடுத்த இயலாத வாக்காளர்களை விசாரணை செய்து விரைவில் முடிக்க வேண்டும். சிறப்பு முகாம்-களில் பெறப்படும் படிவம் -6, 7 மற்றும் 8 ஆகிய-வற்றை, விரைவில் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து, பள்ளிப்பாளையம் ஒன்றியம், குப்-பாண்டம்பாளையம் மற்றும் சாணார்பாளையம் பஞ்., நடுநிலைப்பள்ளி, விட்டலபுரி ஜே.கே.கே.ரங்கம்மாள் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு-வலர் முருகன், தனித் துணை கலெக்டர் சுந்தர-ராஜன், ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement