உழவர் சந்தையில் 58 டன் காய்கறி ரூ.24.29 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 58 டன் காய்கறி, 24.29 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.நாமக்கல், கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்கள், கீரைகளை அறுவடை செய்து வந்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
பொதுமக்கள், உழவர் சந்தைக்கு வந்து, காய்கறிகளை வாங்கி செல்-கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்க-ளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக அளவில் பொதுமக்கள் வருகை தந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்-வது வழக்கம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, வழக்கத்தைவிட உழவர் சந்தையில் விறுவிறுப்-பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 209 விவசா-யிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 47,575 கிலோ காய்கறி, 11,270 கிலோ பழங்கள், 40 கிலோ பூக்கள் என, மொத்தம், 58,885 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் கொண்டுவந்து விற்பனை செய்தனர். அவற்றை, 11,777 பேர் வந்து, தங்க-ளுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர். அதன் மூலம், 24 லட்சத்து, 29,580 ரூபாய்க்கு விற்-பனையானது.
தக்காளி ஒரு கிலோ, 48 ரூபாய், கத்தரி, 38, வெண்டை, 42, புடலங்காய், 28, பீர்க்கங்காய், 60, பாகற்காய், 54, அவரை, 70, முருங்கைக்காய், 80, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 32, தேங்காய், 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்-டது.
மேலும்
-
பறிபோனது சதம்... கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய கோலி!
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; ஒப்புக்கொண்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு