காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையத்திலி-ருந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு மேல்-மட்ட பாலம் அமைக்காத தமிழக அரசை கண்-டித்து, அ.தி.மு.க., சார்பில்,
முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில், நேற்று பிலிக்கல்பா-ளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் பிலிக்கல்பாளையம், கொடுமுடி இடையே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான அறி-விப்பு வந்தது. தற்போது, தி.மு.க., ஆட்சியில் பாலம் கட்டுவதற்காக முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டது.



இதுகுறித்து பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் சட்டசபையில் பலமுறை பேசினார். ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும்பணி துவங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்-றனர். பாலம் கட்டும் பணியை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்தும், உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


ப.வேலுார் நகர செயலாளர் பொன்னிவேலு, பர-மத்தி நகர செயலாளர் சுகுமார், பொத்தனுார் நகர செயலாளர் நாராயணன், வெங்கரை சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் ரவி,
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement