வங்கதேசத்தில் கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹிந்து தொழிலதிபர் உயிரிழப்பு; 3 வாரங்களில் 4வது சோகம்!

16


டாக்கா: வங்கதேசத்தைச் சேர்ந்த ஹிந்து தொழிலதிபர் 50 வயதான கொகோன் தாஸ், மதவெறி கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் 18ம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.


ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கொகோன் தாஸ், 50, தன் வீட்டிற்கு சென்றபோது, வழிமறித்த மதவெறி கும்பல் ஒன்று, கூர்மையான ஆயுதங்களால் அவரை தாக்கியது. பின், தாசை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடியது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். மூன்று வாரங்களில் நான்காவது ஹிந்து நபர் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது சோகம்!

* முதலாவது, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கும்பல், அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது.


* இரண்டாவது, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

* மூன்றாவது, ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


* தற்போது நான்காவது, 50 வயதான கொகோன் தாஸ், கும்பலால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

Advertisement