பத்திரமாக தாயகம் திரும்பினார் ஏமன் தீவில் சிக்கித் தவித்த இந்திய பெண்

5

ஜெட்டா: ஏமனின் சோகோட்ரா தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண்,ரக்கி கிஷன் கோபால், சவூதி அரேபியா வழியாக இன்று (ஜனவரி 8)இந்தியா வந்தடைந்தார்.


ஏமனில், சவுதி ஆதரவு அரசுப் படைகளுக்கும் அமீரக தொடர்புடைய பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே நடந்த போர் பதற்றத்தால் அங்குள்ள சோகோட்ரா தீவிற்கான விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் ரக்கி கிஷன் கோபால் உள்பட 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு பல வாரங்களாக சிக்கி தவித்தனர். இதனையடுத்து அங்குள்ள இந்திய துாதரகத்தின் ஏற்பாட்டின் மூலம் அவர் மீட்கப்பட்டடு பத்திரமாக தாயகம் திரும்பினார்.
இது குறித்து ஏமனில் உள்ள இந்திய துாதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எங்களுக்கு தகவல் கிடைத்ததும், ரக்கி கிஷன் கோபால், ஏமனியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் சோகோட்ரா தீவிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் அவரை வரவேற்று, இன்று காலை அவர் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதனை தொடர்ந்து அவர் பத்திரமாக தாயகம் திரும்பினார்.


இவ்வாறு இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளது.

Advertisement