பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா; 10 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை யொட்டி, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவை உட்பட பல்வேறு இடங்களுக்கு, 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
* நாகர்கோவிலில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில், இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்.
* கன்னியாகுமரியில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில், இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
* திருநெல்வேலியில் இருந்து, வரும் 9, 16ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வரும். செங்கல்பட்டில் இருந்து வரும் 9, 16ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
* திருநெல்வேலியில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். செங்கல்பட்டில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில், மாலை 5:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
* கோவையில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில், இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில், இரவு 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:00 மணிக்கு கோவை செல்லும்.
* போத்தனுாரில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், நள்ளிரவு 12:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 1:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:15 மணிக்கு போத்தனுார் செல்லும்.
* திருநெல்வேலியில் இருந்து, வரும் 8ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து வரும் 9ம் தேதி, பகல் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும்.
* கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து, வரும் 13ம் தேதி அதிகாலை 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, வரும் 14ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு மங்களூரு செல்லும்.
* ஈரோட்டில் இருந்து, வரும் 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து, வரும் 14ம் தேதி இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7:30 மணிக்கு போத்தனுார் செல்லும்
* ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில், இரவு 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும்.
* தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் வரும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வேலுார் சி.எம்.சி., டாக்டர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
-
சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்
-
சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்
-
உயர்கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர் நியமனம் யு.ஜி.சி., பரிந்துரை
-
'அல்மான்ட் கிட்' சளி மருந்துக்கு தமிழகத்திலும் தடை விதிப்பு
-
'டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை இரு மடங்கு உயர்த்த வேண்டும்'