சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்
சென்னை: தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், சர்வதேச புத்தக திருவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவை, தி.மு.க., - எம்.பி. கனிமொழி, கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், 102 நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்களும், தமிழகத்தை சேர்ந்த 90 பதிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், குஜராத், ராஜஸ்தான், கேரளா, டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து, 42 பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:
சென்னை சர்வதேச புத்தக திருவிழாவை போல, கர்நாடகாவிலும் சர்வதேச புத்தக திருவிழா துவங்கப்பட உள்ளது. அதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், தங்கள் அனுபவத்தை கொண்டு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர், நாள்தோறும் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்கின்றனர்; இது, அவர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி பேசுகையில், ''மதம், இனம் போன்ற தடைகளை இலக்கியம் உடைத்தெறிகிறது. உலக வாழ்க்கையை, புத்தகம் வழியாக மனிதன் அறிந்துக் கொள்கிறான். இந்த திருவிழா, உலக வாழ்க்கை, அவற்றின் போராட்டம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ள உதவும்,'' என்றார்.
இந்த விழாவில், ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் புத்தக கண்காட்சி துணைத் தலைவர் கிளாடியா கைசர், பிரான்ஸ் நாட்டின் துணைத் துாதர் எதியன் ரோலான் பியக், பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்