உயர்கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர் நியமனம் யு.ஜி.சி., பரிந்துரை
சென்னை: 'உயர் கல்வி நிறுவனங் களில், மாணவர்கள் விகிதாசாரத்துக்கு ஏற்ப, மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
பல்கலை, கல்லுாரிகளில் படிக்கும் பல மாணவ, மாணவியர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். சமீப நாட்களாக, 'டெலி மானஸ்' பிரசாரத்தின் வாயிலாக, மாணவர்களிடையே மனநலம் சார்ந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, உயர் கல்வி நிறுவனங்களில், மனநல ஆலோசகர்களை நியமிக்க, கல்லுாரிகளுக்கு புதிய வழி காட்டுதல்களை, யு.ஜி.சி ., வழங்கி உள்ளது. சமீபத்தில் நடந்த, யு.ஜி.சி.,யின் , 594வது கூட்டத்தில் , உயர் கல்வி மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இக்கொள்கை குறித்து பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், மனநலம் சார்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
உயர் கல்வி நிறுவனங்களில் உரிய விதிகளை பின்பற்றி, மன நலம் மற்றும் நல்வாழ்வு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்
மாணவ, மாணவி யரின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, மனநல ஆலோசகர்கள் நியமனம் செய்ய வேண்டும்
கல்வி நிறுவனங்களில், 500 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியரை வழிகாட்டியாக நியமிக்க வேண்டும்
மாணவர்களுக்கு ஆதரவாக நிற்க, 100 மாணவர்களுக்கு ஒரு மாணவரை நியமிக்க வேண்டும்
மாணவர்களின் உளவியல் சார்ந்த குறைகளை பதிவு செய்ய, வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய உதவி எண் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்