தமிழக அணி திணறல்

தேனி: தேனியில் 'கூச் பெஹார்' டிராபி தொடர் காலிறுதி (4 நாள்) போட்டி நடக்கிறது. நடப்பு சாம்பியன் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 305 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 213/8 ரன் எடுத்து, 92 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. வத்சல் (52), 175 பந்தில் அரைசதம் அடுத்து கைகொடுத்தார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழகத்தின் ஹேம்சுதேசன் 5, சந்தீப் 5 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து 18 ரன் முன்னிலையுடன் தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. குஷ் பர்தியா (76), நவின் (18) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் அபினவ் (25) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர்.
மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 177/9 ரன் எடுத்து, 195 ரன் முன்னிலை பெற்றிருந்தது. பரத் (34) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement