வெனிசுலாவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது அமெரிக்கா; புரூக்ளின் சிறையில் மதுரோ அடைப்பு
காரகாஸ்: அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நேற்று அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் ஒன்று வெனிசுலா. இந்த இரு நாடுகளையும் மெக்சிகோ வளைகுடா மற்றும் கரீபியன் கடல் இணைக்கிறது. இந்த கடல் பகுதி வழியாக வெனிசுலா, அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
ராணுவ நடவடிக்கை
இதை தடுப்பதற்காக, 'ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்' எனப்படும் 'தெற்கில் வேட்டை' எனும் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இதை, அமெரிக்காவின் கடற்படை செயல்படுத்தியது. கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான படகுகள், கப்பல்களை குண்டு வீசி அழித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை இந்த பகுதிகளில் அமெரிக்க படைகள், 30 முறை தாக்குதல் நடத்தியுள்ளன; 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 29ம் தேதி போதை பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என கூறி, வெனிசுலாவின் படகு தளத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ., ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது .
இது, சமீபத்தில் வெனிசுலா மண்ணில் அமெரிக்கா நடத்திய முதல் நேரடி தாக்குதல்.
முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், போதை பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கத்துடன், வெனிசுலா மீது தீவிர தாக்குதல் நடத்தும் யோசனையும் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
விருப்பம்
இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 1ம் தேதி மதுரோ வெளியிட்ட 'டிவி' உரையில், 'வெனிசுலாவில் வலுக்கட்டாயமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே இந்த அழுத்தம் தரப்படுகிறது; போதை பொருள் காரணமில்லை' என கூறினார்.
வெனிசுலாவின் அரசியல் சூழலும் அதிபர் மதுரோவுக்கு எதிராக உள்ளது. அதிபர் மதுரோ மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு உள்ளது. '2024 அதிபர் தேர்தலில் அவர் தோற்ற போதிலும், தேர்தல் கமிஷன் அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தது' என அமெரிக்கா கருதுகிறது. உள்நாட்டிலும் மதுரோவுக்கு எதிர்ப்பு அதிகரித்து உள்ளது.
அமெரிக்க வெளியுறவு கொள்கையின்படி மதுரோவை அவர்கள் அதிபராக ஏற்கவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கோன்சலேஸையே அதிபராக அங்கீகரித்துள்ளனர்.
போர் விமானங்கள்
இந்நிலையில், வெனிசுலா தலைநகர் காரகாஸ் மீது நேற்று அமெரிக்கா குண்டு வீசியது. அடுத்தடுத்து ஏழு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அங்குள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், போர் விமானங்கள் தாழ்வாக பறக்கும் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய ராணுவ தளத்திற்கு அருகே இத்தாக் குதல்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காரகாஸ் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா, கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்துள்ளன.
இந்நிலையில், வெனிசுலா மீதான தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை :
கூட்டு முயற்சி
வெனிசுலா மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோரை அமெரிக்கப் படைகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளன. அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறையில் அடைப்பு
வெனிசுலா அதிபர் மதுரோவை சிறை பிடித்த படத்தை அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
@block_Y@
அதிபர் டிரம்பின் முதல் பதவி காலத்தில் அமெரிக்க அரசு, மதுரோ மற்றும் பிற உயர்மட்ட வெனிசுலா அதிகாரிகள் மீது போதை பொருள் பயங்கரவாதம், ஊழல் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. மேலும், மதுரோவை கைது செய்ய உதவும் தகவல்களை வழங்கினால், 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. வெனிசுலாவில் மூன்றாவது முறையாக மதுரோ அதிபராக பொறுப்பேற்ற பின், அப்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்த பரிசுத் தொகையை 210 கோடி ரூபாயாக உயர்த்தியது. இந்நிலையில், இரண்டாவது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், இந்த பரிசுத் தொகையை கடந்தாண்டு ஆகஸ்டில் 438 கோடி ரூபாயாக உயர்த்தினார். block_Y
டிரம்ப் ஒழிக
வட கொரியாவைத்தவிர அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு அடிமைதான் போலும் , இது தொடர்ந்தாள் சீனா தைவான் மீதும் ,உக்ரைன் மீது ரஷ்யாவும் ,
அதி தீவிர போரை தொடங்கலாம்
ஆமாம்.. இனிமேல் அமெரிக்கா நாட்டில் எங்கும் போதை பொருள் இருக்காது.. எனக்கு சீன ரஷ்யா நாடுகள் ஏன் இவ்வாறு படைபலம் பெருக்குகின்றன என்ற சந்தேகம் எப்பொழுதும் உண்டு. அமெரிக்காவின் செயலை பார்த்த பின்பு இப்பொழுது தான் அது புரிகின்றது. இல்லாவிடில் போட்டி நாடுகளை எளிதில் அமெரிக்கா விழுங்கிவிடும். உலகின் நீசத்தனம் அனைத்தும் உள்ளடக்கிய மக்களை அரசியல்வாதிகளை கொண்ட நாடு அமெரிக்கா.
அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா சுரண்டவே இந்த தந்திரம்
ஐநா சபை போன்ற அமைப்புகள் இருக்க ஒரு நாடு இப்படிபட்ட நடவடிக்கை எடுக்கலாமா புரியவில்லை, எதற்காக அந்த அமைப்பு இருக்கிறது, தவறான வேலையாகத்தான் தெரிகிறது.
இங்க பக்கத்தில் பெரிய தீவிரவாத தொழிற்சாலை நடத்தும் அதிபர்கள் இருப்பது எல்லாம் அவரகள் கண்டுக்காம இருப்பார்கள் ..எல்லாம் போலி அரசியல் வியாபாரம்..
சூப்பர் . சிங்கம் அமெரிக்கா
நீ ஏன் நேத்துல இருந்து ஒரு எடத்துல நிக்காம இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கிட்ருக்க கடைசில முட்டுச் சந்துல மாட்டிக்கிட்டு ...... போற.
என்ன ஒரு அடிமை சிந்தனை. பலஸ்தீனனை பாருய்யா. புல்லு முளைக்காத நிலத்திற்கு கூட எப்படி சண்டையிடுகின்றான் என்று. வெனி மிக அதிக எண்ணை வளம் இயற்கை வளம் உள்ள நாடு. இனி எண்னை விலை நிர்ணயம் அமெரிக்கா கட்டுப்பாட்டில் சென்று விடும்.
The president of Venezuela is a Dictator. It is good he is arrested.
இருக்கலாம். நீங்கள் இங்குள்ள ஒரு மாநில முதல்வர் மற்றும் அவர் அரசு நிர்வாகம் எப்படி நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதை காட்டிலும் அங்கு ஒன்றும் மோசமில்லை.