தேனியில் இருந்து கூடுதலாக 60 பஸ்கள் இயக்க ஏற்பாடு
தேனி: அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை ஜன., 5ல் மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதால் இன்று கூடுதலாக 60 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை கடந்த டிச.,24ல் விடப்பட்டது. விடுமுறை முடிந்து நாளை பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் சொந்த ஊர் திரும்பியவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்ல வசதியாக தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வழக்கத்தை விட கூடுதலாக தேனியில் இருந்து சென்னைக்கு 10, கோவைக்கு 20, மதுரைக்கு 10, திண்டுக்கலுக்கு 15, திருச்சிக்கு 5 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர ஐயப்ப பக்தர்களுக்காக குமுளிக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கி வருகிறோம் என்றார்.
மேலும்
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி
-
வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் அழைப்பு