அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம் திராளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் அழைப்பு
தியாகதுருகம்: திம்மலை பஸ் நிறுத்தம் அருகே இன்று 5ம் தேதி நடக்கும் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு வெளியிட்டுள்ள அறிக்கை;
தியாகதுருகம் அடுத்த திம்மலை பஸ் நிறுத்தம் அருகே நான்கு வழி சாலையையொட்டி இன்று 5ம் தேதி அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள இளம்பெண் பாசறை மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 35 ஆயிரம் மகளிர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., தலைமையிலான ஆட்சியில் மகளிருக்கு ஏற்படும் துயரங்கள், மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தந்து, விலைவாசியை அதிகப்படுத்தி பறிக்கும் செயல் குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மகளிரணி நிர்வாகிகள், இளம்பெண் பாசறை நிர்வாகிகள், பிற அணியில் உள்ள மகளிர் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்
-
வில்லிசைக்கு ஒரு மாதவி
-
மதுரையின் கதைசொல்லி சரவணன்
-
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு