இந்திய அணி வெற்றி; புதிய மைல் கல்லை எட்டிய கோலி!
வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 93 ரன்னை விளாசிய விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி (ஜனவரி 11) குஜராத்தின் வதோதராவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஹென்றி (62), கான்வே (56) ஆட்டமிழந்தனர். யங் (12). பிலிப்ஸ் (12) ஆகியோர் ஜொலிக்கவில்லை. பின்னர் வந்த ஆல் ரவுண்டர் மிட்சலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 84 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தல 2 விக்கெட்டுகளையும், குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
301 ரன் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 26 ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கோலி சிறப்பாக ஆடி ரன்னை சேர்த்தனர். கில் அரைசதம் (56) அடித்து அவுட்டானார். மறுமுனையில் கோலி ரன் குவிப்பை நிறுத்தவில்லை. துணை கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 93 ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு வந்த ஜடேஜாவும் 4 ரன்னில் அதே ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஷ் ஐயரும் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த சமயத்தில் வெறும் 8 ரன்னுக்கு இந்திய 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பிறகு களமிறங்கிய ஹர்ஷித் ரானா 29 ரன்னை அடித்து சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இறுதியில், காயத்துடன் பேட்டிங் வந்த வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து விளையாடிய கே.எல்.ராகுல், 49வது ஓவரிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.
@block_Y@
கோலி 'நம்பர் 2'
இந்தப் போட்டியில் 93 ரன்னை குவித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கை முன்னாள் வீரர் சங்ககாராவை (28,016 ரன்) பின்னுக்குத் தள்ளி 28,068 ரன்னுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார்.block_Y
@block_B@
பன்டுக்கு பதில்...
பயிற்சியின் போது காயம் காரணமாக ரிஷப் பன்ட் இந்தத் தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ஜூரைல் சேர்க்கப்பட்டுள்ளார். block_B
வாசன் அவர்களே வரலாறு முக்கியம்! இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் எடுத்த மொத்த ரன் 34,357. இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை எடுத்த மொத்த ரன்கள் 22000. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் (Joe Root) டிசம்பர் 30, 1990 அன்று பிறந்திருக்கிறார். எனவே ஜனவரி 11, 2026 நிலவரப்படி அவருக்கு வயது 35 இதற்கு மேலும் அவர் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் அவருடைய உடல் தகுதி என்ன? சச்சின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும்
12,357 ரன்கள் தேவை படுகிறது
அவர் இந்த ரன்களை இன்னும் எத்தனை ஆண்டுகளில் எடுப்பார் என்பதை விளக்கவும் சும்மா பொத்தாம் பொதுவாக எதையாவது அடிச்சு விடக் கூடாது டேட்டா அதாவது தரவுகள் முக்கியம்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லியின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்.மேலும்
-
மும்பை மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்; பா.ஜ., கூட்டணி முன்னிலை!
-
வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின்
-
பண்டிகை நாளில் குட்நியூஸ்; தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.480 சரிவு
-
திருவள்ளுவர் தின விழா விருதுகளை வழங்கினார் முதல்வர்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
-
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டு திருவள்ளுவர்; பிரதமர் புகழாரம்