தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 06) ஆபரண தங்கம் கிராம், 12,830 ரூபாய்க்கும், சவரன், 1,02,640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 271 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஜனவரி 07) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 12,870 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 1,02,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 283 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 12,000 ரூபாய் அதிகரித்து, 2.83 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று மாலை, தங்கம் கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 12,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 1,02,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 6 ரூபாய் குறைந்து, 277 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று காலை, வெள்ளி கிலோவுக்கு, 12,000 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் கிலோவுக்கு, 6,000 ரூபாய் குறைந்தது. நேற்று ஒரே நாளில், வெள்ளி கிலோவுக்கு, 6,000 ரூபாய் அதிகரித்தது
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 272 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தங்க விலை ஒரு நாளைக்கு இரண்டு முறை கூடுகிறது ஆனால் குறையும் போது சிறிய அமௌண்டாக 400 மட்டுமே குறைகிறதுமேலும்
-
பொங்கலோ பொங்கல்; தமிழில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாழ்த்து
-
பாலியில் படகு மூழ்கி விபத்து; 38 பேர் பலி; 23 பேர் பத்திரமாக மீட்பு
-
இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய விசா பெறுவதில் சிக்கல்
-
சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தின் சாவி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு
-
புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தல்
-
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு ஊர்வலம்