பொங்கலோ பொங்கல்; தமிழில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாழ்த்து

10

நமது நிருபர்




தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையொட்டி, ''பொங்கலோ பொங்கல்'' என தமிழில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகங்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதற்காக மகர சங்கராந்தியுடன் கொண்டாடப்படுகிறது. குடிமக்கள் கொண்டாடி மகிழ சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் ''பொங்கலோ பொங்கல்'' என தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.



மேலும் அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கல் என்பது தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழா ஆகும். இந்த ஆண்டு இது ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல வீடு அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

Advertisement