நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு ஊர்வலம்

அரவக்குறிச்சி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நெடுஞ்சா-லைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில் நடைபெற்றது.


திருப்பூர் கோட்ட உதவி பொறியாளர் சிவசுப்பிரமணி, மாண-வர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். அர-வக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அசாருதீன், கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கல்லுா-ரியில் இருந்து இருசக்கர வாகனத்தில், முக்கிய விதிகள் வழியாக பேரணி சென்றனர்.

சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழ்நாட்டை படைப்போம், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டாதீர், பஸ்-களில் படியில் நின்று பயணம் செய்யாதீர், சீட் பெல்ட் அணி-யாமல் வாகனம் ஓட்டாதீர், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய-படி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்வில், திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சிவசுப்பிர
மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement