'இதுவரை சரியா செய்யலையோ?'

3

சென்னை கொரட்டூரில், தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு பங்கேற்றார்.

கூட்டத்துக்கு பின், பத்திரிகையாளர்களிடம் சேகர்பாபு கூறுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில், மக்களின் முதல்வர் ஸ்டாலினை இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக்க சபதம் ஏற்றிருக்கிறோம். எந்த சூழல் நிலவினாலும், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., கொடி தான் பட்டொளி வீசி பறக்கும்.

'கடந்த ஆண்டுகளை விட இன்னும் சிறப்பாக மக்கள் நலப் பணிகளை செய்து, இந்தியாவே போற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை படைப்பார்' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அப்படின்னா, இதுவரை நடந்த ஆட்சியில், மக்கள் நலப் பணிகளை சரியா செய்யலைங்கிறதை அமைச்சர் ஒப்புக் கொள்கிறாரோ...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

Advertisement