பெரியபாளையம் அரசு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

ஊத்துக்கோட்டை: ஜன. 9-: நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு வகுப்பறைகள் இல்லை. இருக்கும் வகுப்பறைகளும் தரை சேதம் அடைந்தும், கட்டடங்களில் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது.

கழிப்பறைகள் கூரை இன்றி, கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயத்தில் இருந்தன.

இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி கற்பகம் நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

தலைமை ஆசிரியரிடம், சேதம் அடைந்துள்ள வகுப்பறை தரைதளம், குடிநீர் பருகும் இடங்களை சீரமைக்கவும், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Advertisement