140 கோடி இந்தியர்களுக்கு மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதற்கு முன்னுரிமை: மத்திய அரசு பதில்

5

புதுடில்லி: '' 140 கோடி இந்தியர்களுக்கு மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது,'' என, அமெரிக்காவின் 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது : எரிசக்தி குறித்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சர்வதேச சந்தைகளின் ஆதிக்கத்தால் வழிநடத்தப்படுகிறோம். மேலும், 140 கோடி மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தி பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு ஆதாரங்கள் மூலம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மசோதா



முன்னதாக, ரஷ்யாவின் வருவாய் ஆதாரங்களை தடுக்கும் வகையில், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு கூடுதல் வரியையும் அமெரிக்கா விதித்தது.



அமெரிக்க செனட் உறுப்பினர்களான லிண்ட்சே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் புளூமெண்டல் ஆகியோர் சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது, 500 சதவீத வரி விதிப்பதற்கான மசோதாவை முன்மொழிந்தனர்.

இம்மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்து நிறைவேற்றுவதற்கு, அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை குறி வைத்து இம்மசோதா கொண்டு வரப்படுகிறது. அடுத்த வாரம் இம்மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது, 500 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடைக்கும். இம்மசோதா மீதான ஓட்டெடுப்பு அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளது.




@quote@இதனைத் தவிர்த்து, மேலும் பல விஷயங்கள் குறித்து ரந்தீர் ஜெயிஸ்வால் பல விஷயங்கள் குறித்து பேட்டியளித்தார். quote

ரஷ்ய கப்பலில் இந்தியர்கள்



தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி அந்நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற ரஷ்யாவுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. இந்த கப்பலில் 3 இந்தியர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆயில் டேங்கரில் உள்ள இந்தியர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வங்கதேச - பாக்., விமான சேவை



வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான சேவை வரும் 29ம் தேதி துவங்க உள்ளது. டாக்காவில் இருந்து 2,370 கி.மீ., தொலைவில் உள்ள கராச்சி நகருக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இந்திய வான்வெளி வழியாக இந்த விமானம் செல்லும் என வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதற்கு இந்தியாவிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டதா என்று தகவல் வெளியாகவில்லை.


இது தொடர்பாக ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்த விவகாரத்தில் வங்கதேசத்துடன் வான் சேவை ஒப்பந்தம் போடப்பட்டு பிரச்னை கையாளப்படும். வங்கதேசத்தில் நேர்மையான, சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடத்தப்படுவதற்கு இந்தியா ஆதரவாக உள்ளது என்றார்.

கிரீன்லாந்து விவகாரம்



ஈரானில் பிடிபட்டுள்ள இந்திய மாலுமிகளுக்கு தூதரக உதவி கிடைக்க அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் உறவில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வருகிறோம். இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பலர் அமெரிக்காவில் வசித்து வருவதால், கவனத்தில் கொண்டுஉள்ளோம்.கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement