உங்கள் கனவு நனவானால் தமிழகத்தின் கனவுகள் நனவாகும்; முதல்வர் ஸ்டாலின்

24

சென்னை: உங்கள் கனவு நனவானால் தமிழகத்தின் கனவுகள் நனவாகும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு:


மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனைத் திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் உண்மையான நோக்கம்; அதனை நிறைவேற்றுவதே திராவிட மாடல் அரசு. உங்க கனவை சொல்லுங்க என்று உங்கள் வீடு தேடி வரவுள்ள எங்களது குழுவிடம் உங்கள் கனவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


2030க்குள் அவற்றை நனவாக்க நான் பாடுபடுவேன். இதுவே என் வாக்குறுதி. உங்கள் கனவு நனவானால்; தமிழகத்தின் கனவுகள் நனவாகும்.


இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

Advertisement