பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக நம்பிக்கைத் துரோகம்; அண்ணாமலை விளாசல்
சென்னை: வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டு காலம் காத்திருந்த ஆசிரியர்களுக்கு, திமுக மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என, கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, கண்ணன் என்ற ஆசிரியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை கடினமான சூழலில் வாழ்க்கை இருந்திருந்தால், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் கண்ணன் தள்ளப்பட்டிருப்பார் என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை.
பணி நிரந்தரம் கோரிப் போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில், வெறும் ரூ. 2,500 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருக்கிறது திமுக அரசு. பகுதி நேர ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம் மட்டுமே.
ஆனால், அதைக் குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டு காலம் காத்திருந்த ஆசிரியப் பெருமக்களுக்கு, திமுக செய்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.
ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும், வாழ்க்கையும் எப்படிப் புரியும்?
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறி உள்ளார்.
பெரும்பாலான பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் தான் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நியமிக்கப்பட்டது 2012 அ.தி.மு.க., ஆட்சி காலத்தில். இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் தான் பணி புரிவார்கள். ஏற்கனவே Tet தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டிவிட்டது. எந்த தேர்வும் எழுதாமல் எப்படி இவர்களை நியமித்தால் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் எங்க போவாங்களாம்?
பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக நம்பிக்கைத் துரோகம் அண்ணாமலை விளாசல். அண்ணாமலை அவர்கள் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார் என தான் அனுமானம் செய்ய முடிகிறது .ஏனென்றால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக என்ன கொடுமைகள் /அநீதிகள் /குரூரங்கள் /அடக்கு முறைகள் /வழக்குகள் /தண்டனைகள் /சம்பளம் கட் / என செய்தாலும் குடும்பத்துடன் திமுகவிற்கு மட்டுமே வாக்களிப்பார்கள். திமுவிற்கு எதிராக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தலில் வாக்களிப்பதை ராஜ துரோக செயல் என பேசும் அளவிற்கு இவர்கள்திமுக விசுவாசம் உள்ளவர்கள் .இது ஜீனில் ஊறியது.மாற்றவே முடியாது .ஆதலால் இந்த போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் திமுகவிற்கு தான் பழக்க தோஷத்தில் வாக்களிப்பார்கள் .இதை மாற்ற அண்ணாமலையால் கூட முடியாது
எனக்குத் தெரிந்து ஜாஃபர் சாதிக் பற்றி இதுதான் லேட்டஸ்ட் செய்தி .... ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அதிகாரி மாற்றம் ....... வெளிவந்த தேதி 24-12-2024 ........
நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு... அந்த காலத்தில். இப்பொழுது திமுக ஆட்சியில்: நம்பினார் நசுக்கப்படுவார்கள்.... திமுகவால் வைக்கப்படுவார்கள் ஆப்பு.
2012 ல் அதிமுக அரசை நம்பி வேலைக்கு சேர்ந்தார்கள்
திமுகவை யார் நம்பச்சொன்னது? நம்பியது அவர்கள் தவறுதானே? திமுக என்றாலே ஊழல், பொய், பித்தலாட்டம். அவர்களை நம்பலாமா?
சூரியனை தாங்கி பிடித்துக் கொண்டிருப்பது மலையே. இரண்டு மலைகளுக்கிடையில்தான் சூரியன் எட்டிப்பார்க்கிறது.மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்