தேசிய குத்து சண்டை போட்டியில் குளறுபடி: வீரர்கள் கடும் குளிரில் அவதி
புதுடில்லி: புதுடில்லியில் நடந்து முடிந்த தேசிய குத்து சண்டை போட்டியில் பங்கேற்றவர்களுக்கு முறையாக அறைகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் குளிரில் தவிக்கும் நிலை உருவானது.
எலைட் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதற்காக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் புதுடில்லி கிரேட்டர் நொய்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டிகள் கடந்த டிச.,30 ம் தேதி முதல் ஜன.,7 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தலைநகரில் நிலவும் மோசமானகாற்று மாசுபாடுகாரணமாக போட்டிகள் ஜன.,7 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர்,கோவா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதிலும்இருந்து வீரர் மற்றும் வீராங்கனையர், அவர்களின் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தலைநகரில் போட்டி நடைபெறும் இடங்களில் குவிந்தனர்.
இவர்கள் அனைவரும் போட்டி நடைபெறும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்த பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மாலையில் போட்டி நடைபெறும் இடத்திலிருந்து திரும்பிய பிறகு, மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.
இது குறித்து போட்டியில் கலந்து கொண்ட அணியின் அதிகாரிகள் "போட்டி நடைபெறும் இடத்திலிருந்து நாங்கள் திரும்பியதும், அறைகளைக் காலி செய்யுமாறு எங்களிடம் கூறப்பட்டது. எங்கள் முன்பதிவுகள் செய்யப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள். போட்டிகள் முடிந்து தாங்கள் திரும்பியபோது, தங்களின் உடைமைகள் ஏற்கனவே மூட்டை கட்டப்பட்டு வரவேற்பறைக்கு மாற்றப்பட்டிருந்தது என இந்திய குத்துசண்டை சம்மேளனத்திடம் புகார் கூறினர்.
இது குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் கூறுகையில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஜிபி பல்கலைக்கழகத்தில் உள்ள அருகிலுள்ள வசதியில் தங்க வைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அங்கு இரவு நேரத்திற்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதில் போட்டி அட்டவணையில் ஏற்பட்ட குழப்பங்கள், குத்துச்சண்டை வளையங்களை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டிகள் துவங்குவதில் நான்கு மணி நேரம் தாமதம், பாரபட்சமான நடுவர் தீர்ப்பு தொடர்பான சர்ச்சைகள், உணவு மற்றும் தங்குமிடப் பிரச்சனை உள்ளிட்டவைகளுடன் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
காலிறுதியில் லக்சயா சென்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
கேரளாவில் உறுப்பு மாற்று ஆப்பரேஷன்; பயணியர் விமானத்தில் பறந்தது சிறுநீரகம்!
-
உலக விளையாட்டு செய்திகள்
-
பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை நடவடிக்கை தொடரும்; ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
சிறந்த வீரர் ஸ்டார்க்: ஐ.சி.சி., விருதுக்கு தேர்வு
-
தேசிய 'கோ கோ': ரயில்வே 'சாம்பியன்'