காலிறுதியில் லக்சயா சென்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.
டில்லியில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-21, 21-17, 17-21 என, பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரனாய் 21-18, 19-21, 14-21 என சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீனாவின் ஹான் யூ மோதினர். இதில் மாளவிகா 18-21, 15-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 22-20, 22-24, 21-23 என, சீனாவின் லி யி ஜிங், லுவோ ஜு மின் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 27-25, 21-23, 19-21 என ஜப்பானின் ஹிரோகி மிடோரிகாவா, கியோஹெய் யமாஷிதா ஜோடியிடம் வீழ்ந்தது.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!