புனேயிலிருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி

மும்பை: புனே-பெங்களூரு ஆகாசா ஏர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


புனேவிலிருந்து பெங்களூரு செல்லும் ஆகாசா ஏர் விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் விமானம் புறப்படாமல் ஓடுபாதையிலே நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.


இதனால், பயணிகள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். தொழில்நுட்ப காரணங்களால் விமானம் தாமதமானதை ஒப்புக்கொண்டு ஏர் விமானம் நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாலை நேர விமானத்தில் பயண நேரத்தை மாற்றி அமைக்கும் வசதியும், பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement