போதைப்பொருட்களை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: வைகோ பேச்சு

மேலூர்: தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றக் கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ திருச்சியிலிருந்து -மதுரை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் மேலூர் வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது : போதைப்பொருட்களை வைத்திருப்பவர்கள், பயன்படுத்துபவர்களுக்கு கடுங்காவல் சிறை தண்டனை என முதல்வர் ஸ்டாலின் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். போதையின் பிடியிலிருந்து வருங்கால தலைமுறைகள் மீட்கப்பட வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக தான் இந்த நடை பயணம்.

நதிகள் இணைக்கப்பட வேண்டும் என லோக்சபாவில் வலியுறுத்தியுள்ளேன். தி.மு.க.,வை அழித்து விடுவோம் என மத்தியமைச்சர் அமித்ஷா பேசுவது அகங்கார பேச்சு. எங்களிடம் இருக்கும் சக்தியை பயன்படுத்தி தி.மு.க., விற்கு பக்கபலமாக நின்று இயங்குவது என முடிவெடுத்து தான் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்றார்.

Advertisement