இரட்டை இலக்கத்தில் பாஜ உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள்; நயினார் திட்டவட்டம்

19

கோவை: இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜ உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவையில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எங்களுக்கு இபிஎஸ் முதல்வர். அமைச்சரவை குறித்த முடிவுக்கு தேர்தல் முடியணும். வெற்றி பெற வேண்டும். இப்பொழுதே அமைச்சர் என்று எப்படி சொல்ல முடியும். வெற்றி பெற்ற பிறகு பாஜவினர் அமைச்சர் ஆவது குறித்து அப்புறம் பார்க்கலாம்.


அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற எந்த அழுத்தத்தையும் நாங்கள் இதுவரை கொடுக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு எத்தனை இடம் என இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பிறகு நாங்கள் சொல்வோம். இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜவின் உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள்.


தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழகத்தின் தேஜ கூட்டணி கட்சியின் தலைவராக இபிஎஸ் இருக்கிறார். ஒவ்வொரு கட்சியாக எங்கள் கூட்டணிக்கு வருகின்றனர். முதல்கட்டமாக அன்புமணி வந்து இருக்கிறார். அடுத்தது பொங்கல் முடியட்டும், தை பிறந்தால் வழி பிறக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement