ஒடிசாவில் சிறிய ரக விமானம் விபத்து: 6 பேர் காயம்
ரூர்கேலா: ஒடிசாவின் ரூர்கேலா அருகே இந்தியா ஒன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டபோது விபத்துக்குள்ளானது. இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கி இந்தியா ஒன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் சென்றபோது, நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் முயற்சியாக, அவர் விமானத்தை வயல்வெளியில் தரையிறக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. ரூர்கேலா விமான ஓடுதளத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்டா (ரகுநாத்பாலி பிளாக்) அருகே உள்ள ஒரு திறந்தவெளி புல்வெளியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விமானிகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.பயணிகள் சிறிய காயங்களுடன் சீரான நிலையில் உள்ளனர். இருப்பினும், விமானி பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் ரூர்கேலாவில் உள்ள இஸ்பாட் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விபூதி பூஷன் ஜேனா ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து, காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்
-
வில்லிசைக்கு ஒரு மாதவி
-
மதுரையின் கதைசொல்லி சரவணன்
-
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு