பொங்கல் விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை அறிவியல் கல்லுாரியில் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருதும், சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கேட்டரிங் பள்ளி மாணவிகள் பொங்கல் வைத்து உறியடித்து விழாவை கொண்டாடினர்.நிகழ்வில் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

*முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில் நமது ஊர் மோடி பொங்கல் விழா நடந்தது.

ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். 51 பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் வைத்து வருண பகவானை வழிபட்டனர்.பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர்கள் சண்முகநாதன், குமார், சட்டசபை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement