விபத்து இல்லாமல் பேருந்து ஓட்டிய 60 பேருக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: விபத்து இல்லாமல் அரசு பேருந்து ஓட்டிய, 60 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில், பாதுகாப்பான பேருந்து இயக்க வார விழா நேற்று நடந்தது.

பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி நவீன் துரை பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, விபத்து ஏற்படுத்தாத வகையில் பேருந்துகளை ஓட்டிய, 60 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினர். இதில், உத்திரமேரூர் பணிமனை மேலாளர் நாராயணன், ஓரிக்கை பணிமனை மேலாளர்கள் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement