குளித்தலை வட்டாரத்தில் விவசாய பணிகள் கள ஆய்வு
குளித்தலை: குளித்தலை வட்டாரத்தில் நடைபெறும், எண்மய பயிர் கணக்கீட்டு பணிகளை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சிங்காரம் கள ஆய்வு மேற்கொண்டார்.
நாடு முழுவதும் மிண்ணணு பயிர் கணக்கீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்புகளை துல்லியமாக மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு பணிகளுக்காக எண்மய பயிர் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு அறிவு-றுத்தியது.
தமிழ்நாட்டில், 2024ம் ஆண்டு ராபி பருவம் முதல் டிஜிட்டல் கிராப் சர்வே தொடங்கப்பட்டது. தமிழ-கத்தில் 37 மாவட்டங்களில் உள்ள, 17,116 வருவாய் கிராமங்களில், 4,23,00,095 சர்வே சப்-டி-விஷன் எண்களிலும், கரூர் மாவட்டத்தில், 200 வருவாய் கிராமங்களில், 7,17,052
சர்வே சப்டி-விஷன் எண்களிலும், குளித்தலை வட்டாரத்தில், 22 வருவாய் கிராமங்களில், 52,884 சர்வே சப்டி-விஷன் எண்களிலும் எண்மய பயிர் கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்-பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
பயிர் கணக்கிட்டு பணிகளை வேளாண்மை,தோட்டக்கலை, வேளாண் வணி-கத்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்-றனர். எண்மய பயிர் கணக்கீட்டு பணிகளை குளித்தலை வட்டாரத்தில் தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார், இரணியமங்கலம், சத்திய-மங்கலம் கிராமங்களில் கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் கள ஆய்வு மேற்கொண்டார்.
குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், வேளாண்மை அலுவலர் மகேந்திரன், துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் வைரப்பெ-ருமாள், செல்லப்பன், பொன்னையா, ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் செல்வேந்திரன்
உடனிருந்தனர்.
மேலும்
-
வேலுார் சி.எம்.சி., டாக்டர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
-
சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்
-
சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்
-
உயர்கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர் நியமனம் யு.ஜி.சி., பரிந்துரை
-
'அல்மான்ட் கிட்' சளி மருந்துக்கு தமிழகத்திலும் தடை விதிப்பு
-
'டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை இரு மடங்கு உயர்த்த வேண்டும்'