கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் பொங்கல் விழா

பெருந்துறை: பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். அனைத்து துறைகளின் சார்பில், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை பேணி காக்கும் வகையில் பொங்கல் விழா நடத்தினர்.
பொங்கல் மற்றும் கோலப் போட்டிகளில் சிறப்புக்குரியவர்-களை தேர்ந்தெடுக்க, கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்-துவக் கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
விழாவில் உரியடித்தல் நிகழ்வு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில், மாணவ மாணவியர், பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்-டனர். கொங்கு ஐ.டி.ஐ., முதல்வர் தினேஷ்குமார், துறை தலை-வர்கள், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

Advertisement