காலாவதியான மது விற்பனை; அண்ணாமலை குற்றச்சாட்டு

25


சென்னை: காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல; அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.


அவரது அறிக்கை: கோவையில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொது மக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதல்வருக்கு அருவருப்பாக இல்லையா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement