சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு

2

சென்னை: யுடியூப்பர் சவுக்கு சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


உடல்நிலை மிக மோசமானதால், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். இன்னும் சிகிச்சையில் இருக்கிறேன். என்ன சிகிக்சை என்ற விபரத்தை கொடுக்க வேண்டும் என்று, அருண் ஐபிஎஸ் தனியார் மருத்துவ மனையை மிரட்டுகிறார்.


தனியார் மருத்துவமனை அஞ்சுகிறது. ஒரு மனிதன் உடல்நிலை சரியில்லாமல் சிகிக்சை எடுக்கக்கூடாதா? அவன் உயிர் வாழக் கூடாதா ? இது ஆட்சியா ? இவ்வாறு சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement