நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; லக்னோவில் அவசர தரையிறக்கம்

1


புதுடில்லி: டில்லியில் இருந்து புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


டில்லியில் இருந்து மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவுக்கு 222 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் லக்னோ விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதை விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர்.


முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் கழிப்பறையில், வெடிகுண்டு மிரட்டலுடன் ஒரு டிஷ்யூ பேப்பர் கண்டறியப்பட்டது என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமானத்தில் இருந்த 222 பயணிகள் மற்றும் எட்டு குழந்தைகள், இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் பத்திரமாக உள்ளனர்.


அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement