புதுச்சேரி: புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

கனகன் ஏரியில் இருந்து புதுநகர் செல்லும் சாலை குண்டும் குழிமாக உள்ளது.

மணி, புதுச்சேரி.

பயணியர் நிழற்குடை தேவை

அரியாங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

காத்தவராயன், அரியாங்குப்பம்.


போக்குவரத்து நெரிசல்


வள்ளலார் சாலை, 45 அடி ரோட்டில், லாரிகளை நிறுத்தி லோடு இறக்கி வருவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பாஸ்கர், புதுச்சேரி.


மறைமலை அடிகள் சாலையில், மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காந்தி, புதுச்சேரி.


ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை


புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில் டவுன் பஸ் இயக்க வேண்டும்.

கண்ணன், புதுச்சேரி.

Advertisement