களத்தில் காட்டுவது ரோஷம் குழந்தைகளிடமோ பாசம் செஞ்சுரி அடிப்பாரா பாலமேடு அழகர்
பாலமேடு: பாலமேடு கிராமத்தில் சேதுராமன், முத்துலட்சுமி தம்பதியினர் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளை 'அழகர்' களத்தில் ரோஷத்துடனும், குழந்தைகளிடம் பாசத்துடனும் வளர்கின்றன.
சேதுராமன் கூறியதாவது: பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கிறோம். வீட்டில் நாட்டு பசுக்கள் மட்டுமே உள்ளது. எங்கள் காளை 'அழகர்' ஐந்து ஆண்டுகளில் சிவகங்கை, கோவை என 18 மாவட்டங்களில் 99 போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளான். வாடிவாசலில் இருந்து எகிறி குதித்து சீறிப்பாய்வான். களத்தில் நின்று திரும்பி பார்த்தால் அத்தனை வீரர்களும் அரண்டு போய்விடுவர் என்றார்.
முத்துலட்சுமி கூறியதாவது: காளைகளை நான்தான் பராமரிக்கிறேன். அழகர் என்னிடமும், மகன் யுவனேஷ் 9, மகள் யுவஸ்ரீ மற்றும் குழந்தைகள் என்றால் அன்பாக இருப்பான். நடைப்பயிற்சிக்கு என் மகனுடன் அமைதியாக சென்று வருவான். போட்டியில் அழகர் பெற்ற பரிசுகளை எளியோருக்கு அன்பளிப்பாக தந்துள்ளோம். அழகரின் 100வது வெற்றியை எதிர்பார்த்து, வெள்ளி நெற்றிச்சுட்டி செய்துள்ளோம் என்றார்.
மேலும்
-
வேலுார் சி.எம்.சி., டாக்டர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
-
சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்
-
சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்
-
உயர்கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர் நியமனம் யு.ஜி.சி., பரிந்துரை
-
'அல்மான்ட் கிட்' சளி மருந்துக்கு தமிழகத்திலும் தடை விதிப்பு
-
'டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை இரு மடங்கு உயர்த்த வேண்டும்'