17ல் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட முடிவு

மேட்டூர்: அ.தி.மு.க., மேட்டூர் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அதே பகுதியில் நேற்று நடந்தது. நகர செயலர் சரவணன் தலைமை வகித்தார். அதில் வரும், 17ல், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை கொண்டாடி, அனைத்து வார்டுக-ளிலும் இனிப்பு வழங்குதல்; மேச்சேரியில் நாளை, பொதுச்செ-யலர், இ.பி.எஸ்., தலைமையில் நடக்கும் பொங்கல் விழாவில், 1,000 பேர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.

மின்வாரிய அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சம்பத்குமார், மாவட்ட மகளிரணி செயலர் லலிதா, மாவட்ட வக்கீல் அணி செயலர் சித்தன், இளைஞர் அணி தலைவர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement