ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா

ராமேஸ்வரம்: தைப்பொங்கல் விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர்.

தைத் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரி சனம் செய்தனர். காலை 8:00 மணிக்கு மேல் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர்.

பின் பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்ததும், அங்கு கூடியிருந்த ஏராள மான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள்.

பின் சுவாமி, அம்மன் கோயில் ரதவீதியில் வீதி உலா சென்று பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement