இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள், இன்று (ஜனவரி 19) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.
மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
1. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப் 27ல் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து இன்று 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.
2. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியை விரிவுப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த மத்திய அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்.
3. போரை முடிவுக்கு கொண்டு காசா அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். காசா அமைதி வாரியத்தையும் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். இந்த திட்டம் தொடர்பாக இன்று உலக நாடுகள் பரபரப்பாக விவாதித்து வருகின்றன.
4. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு எமிரேட்சின்( யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் இன்று இந்தியா வர உள்ளார். அவர் பிரதமர் மோடி உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவும், யுஏஇயும் வலுவான பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. நெருக்கமான மற்றும் பன்முக உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன.
5. பாஜ புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்ய இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இப்போது பாஜ தேசியச் செயல் தலைவராக இருக்கும் நிதின் நபீன் புதிய பாஜக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
6. வாக்காளர் பட்டியல்களை சிறப்புத் திருத்தம் செய்யும் தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
7. கர்னல் சோபியா குரேஷிக்கு எதிரான தனது கருத்துக்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
8. பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில், குஜராத்- பெங்களூரு ஆகிய இரண்டு அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடக்கிறது.
9.ஹாக்கி இந்தியா லீக் தொடரில் ராஞ்சி-எச்.ஐ.எல் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் தகவல்கள் அறிந்து கொண்டேன் ஆனால் தொடர்ந்து செய்தியை படிப்பதால் எனக்கு நேரமில்லை நான் கூலி வேலை பார்க்கிறேன் மூடை தூக்கினால் தான் எனக்கு காசு வரும்மேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி