கிருஷ்ணகிரி மத்துார் டோல்கேட்டில் அணிவகுத்த வாகனங்கள்

கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர் விடுமுறையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூரில் பணியாற்றி வரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த

மக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த, 13ம் தேதி இரவே புறப்பட்டு சென்றனர். ‍தொடர்ந்து, 5 நாட்கள் பொங்கல் விடுமுறை, நேற்றுடன் முடிந்த நிலையில்,

தனியார் ஆம்னி பஸ்கள், கார்களில் நேற்று மீண்டும் பணிபுரியும் இடத்திற்கு திரும்-பினர்.
சென்னை, தென்மாவட்டங்கள் மற்றும் பாண்-டிச்சேரி என, அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர், ஒரே நேரத்தில் கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூரு

திரும்பினர். இதனால் சென்னையில் இருந்து வந்தவர்களின் வாக-னங்கள், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அரு-கிலும், பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, திண்டி-வனம்,

திருக்கோவிலுாரில் இருந்து வந்தவர்-களின் வாகனங்கள், மத்துார் அடுத்த நாகம்பட்டி டோல்கேட்டிலும், இவை அனைத்தும் செல்லும் கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும்,

வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி நகர், நேற்று மதியம் முதல் வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.
இதனால் ஓசூர், பெங்களூருவுக்கு காரில் செல்ல இருந்த பலரும், கிருஷ்ணகிரியில் ராயக்-கோட்டை சாலை வழியாக ராயக்கோட்டை, உத்-தனப்பள்ளி வழியாக சென்றனர்.

Advertisement